Tuesday, April 19, 2011

ஒன்னுமே புரியல!!!!!!

சம்பவம் ஒன்னு:
ஒரு ஏழு வருஷம் பின்னாடி போவோம். 2004 ஜுலை 17 காலை 11 மணி, நம்ம நண்பன் ஒருவன் ஒரு பொண்ண ப்ரொபோஸ் பண்ண போனான். நாங்களும் கூட போனோம் (ப்ரச்னைனா, அவன அள்ளிப் போட்டுக்கிட்டு வர!!!!!)

நண்பன் : "நிஷா, I LOVE YOU!!!"
நிஷா : "என்ன? லவ்வா? என்ன சுரேஷ், இப்போ தான் என்ன பாத்த, ரெண்டு நாள்ல லவ் வந்துடுச்சா?"
நண்பன்: "உன்ன பாத்ததும் லவ் வந்துடுச்சு நிஷா, லவ் இஸ் அ மேஜிக், அது எப்ப வரும்னு யாருக்கும் தெரியாது."
நிஷா: "ஸீ, லவ் உடனே வராதுனு ஸ்ட்ராங்கா நம்பறவ நான். நம்ம நல்ல நண்பர்களா இருந்து, ஒரு ரெண்டு மூனு வருஷம் பழகி இருந்தா, அப்போ கொஞ்சம் உன்னப் பத்தி எனக்கு தெரிஞ்சுருக்கும். சோ, ஈஸியா உன்னோட கேரக்டர என்னால ஜட்ஜ் பண்ண முடியும், அப்போ சொல்லி இருந்தினா, நான் ஒத்துக் கிட்டு இருப்பேன். அட்லீஸ்ட் யோசிச்சு இருப்பேன்."
நண்பன் : ".........................." டொய்ங்க்ங்க்ங்க் (பல்புதான் வேற என்ன)

சம்பவம் ரெண்டு:
நிகழ்காலத்துக்கு வாங்க. இது போன வாரம் செவ்வாய் காலை 10 மணி.
மறுபடியும் அதே நண்பன், இப்போ வேற கூட்டம். வேற இடம். நானும், மற்றொரு நண்பன் தவிர யாருக்கும் அந்த இடத்தில் நிஷா பல்பு தெரியாது.

நண்பன் : "ஸ்வாதி!! I LOVE YOU!!!"
ஸ்வாதி : "ஹே சுரேஷ்!! நீ இத சொல்லுவனு எக்ஸ்பக்ட் பண்ணவே இல்ல"
நண்பன் : "its ok Swathi, cool. நாம இந்த 3 இயர்ஸ்ல நல்லா பழகினோம். என்னோட கேரக்டர் உனக்கு இப்போ நல்லா தெரியும், ஸோ உன்னால ஈஸியா கெஸ் பண்ண முடியும். அதான் இத்தனை நாள் கழிச்சு இப்போ சொன்னேன்"
ஸ்வாதி : "சுரேஷ், u know one thing. லவ் இஸ் அ மேஜிக். எனக்கு லவ்னா, உன்ன பாத்தப்பவே வந்துருக்கனும். இந்த 2 வருஷத்துல எனக்கு நல்ல நண்பனா தான் இருந்த. அப்டியே நண்பனாவே உன்ன பாக்க பழகிப் போன எனக்கு எப்டி திடீர்னு லவ்வரா ட்ரீட் பண்ணத் தோணும்??? lets be friends man"
நண்பன் : ".........................." டொய்ங்க்ங்க்ங்க் (அதே பல்பு தான்)

பொண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடில பாஸ். நமக்கு ஓவரா கண்ணக் கட்டுதே. ஆனா இந்த ரெண்டுமே முறையான rejection-க்கு உதாரணம்.
இன்னும் சுரேஷ் மண்டய போட்டு உடைச்சுக் கிட்டுதான் இருக்கான். யாராச்சும் இந்த மேட்டர் ல உதவி பண்ணுங்கப்பா!!!

கூடிய விரைவில், நம்ம பல்பு வாங்குன கதையும் வரும்....

யாராச்சும் இந்த மேட்டர் ல ஹெல்ப் பண்ணுங்கப்பா!!!